உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை

மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை

திருப்பரங்குன்றம் : இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.மகாத்மா காந்தி அனைத்துவித மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நலச் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடந்தது. விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மூன்றாண்டுகளாக அளித்த மனு தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து சங்கத் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் சிறிது நேரம் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களிடம் தாசில்தார் கவிதா பேசியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ