உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சிங்கப்பூர் தமிழ் இலக்கிய விழா

 சிங்கப்பூர் தமிழ் இலக்கிய விழா

மதுரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தில், சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளம், சிங்கப்பூர் தமிழர் இயக்கம் சார்பில் 'சிங்கப்பூர் தமிழ் இலக்கிய விழா', சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் நடக்கிறது. நேற்று துவங்கிய விழாவில், 'சிங்கப்பூர் தமிழரின் வாழ்வும் வளமும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லுாரி, ஆராய்ச்சி மைய நிறுவனர் சேதுகுமணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கள தலைவர் ரத்தின வெங்கடேசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசினர். மாலையில் புலவர் ராமலிங்கம் தலைமையில் வழக்காடு மன்றம் நடந்தது. சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !