உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

வாடிப்பட்டி: மதுரை பரவையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், எக்சேஞ்சர் நிறுவனம் தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் சமூக நல மையம் சார்பில் இலவச சிறுதானிய சத்துமாவு, கார வகைகள் பாரம்பரிய உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.தொழில் துவங்க எப்.எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் மாவட்ட தொழில் மையம் மூலமாக காட்டேஜ் சான்றிதழ் இலவசமாக பெற்று தரப்படும். வங்கி மூலம் மானிய கடன் ஆலோசனைகள் நடத்தப்படும்.பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 26 நாட்களுக்கு பயிற்சி நடக்கும். பெண்களுக்கு மட்டும் அனுமதி. உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். தொடர்புக்கு 98946 90092.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி