உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுதானிய பயிற்சி முகாம்

சிறுதானிய பயிற்சி முகாம்

சோழவந்தான்: வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மன்னாடிமங்கலத்தில் விவசாயிகளுக்கு ரபி பின் பருவ பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் தலைமை வகித்து சிறுதானியங்கள் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் விவேகானந்தன் சிறுதானிய மதிப்பு கூட்டுதல் குறித்தும், வேளாண் உதவி இயக்குனர் பாண்டி செயல்படுத்தப்படும் திட்டங்கள் பயறு சாகுபடியின் பயன்கள் நெல் தரிசில் பயறு விதைகள் சாகுபடி குறித்தும் விளக்கினர். வேளாண் துணை அலுவலர் பெருமாள், உதவி அலுவலர் விக்டோரியா செலஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை