சோலார் விழிப்புணர்வு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் பயன்பாட்டிற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் வரவேற்றார். நிலையத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சூரியசக்தி பம்ப்செட், சோலார் டிரையர், சோலார் மின்வேலி அமைப்பதன் பயன், அரசின் மானியம் குறித்து செயற்பொறியாளர் பேபி மீனாட்சி பேசினார்.