உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொற்கிளி அம்மன் மகளிர் சுய உதவி குழுவினர் 12 பேரின் பெயரில் ஊழியர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுயஉதவி குழுவினர் 12 பேரையும் விசாரணைக்கு வரவேண்டும் என விசாரணை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வங்கி ஊழியர்கள் முறைகேடு பணத்தை மீண்டும் வரவு வைத்தனர். எனவே 12 பேர் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை