உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென் மாநில சிலம்ப போட்டி

தென் மாநில சிலம்ப போட்டி

திருமங்கலம்: திருமங்கலம் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ், இந்தியன் சிலம்பு பள்ளி இணைந்து நடத்திய தென் மாநில 5வது சிலம்பாட்ட போட்டி திருமங்கலத்தில் நடந்தது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் தலைமை பயிற்சியாளர் பால்பாண்டி, மதுரை சிலம்பாட்ட கழக செயலாளர் மணி போட்டிகளை துவக்கி வைத்தனர். ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், தொடுமுறை போட்டிகள் நடந்தன. வென்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை