சிறப்பு சொற்பொழிவு
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமில் 'வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் வடிவேல் வரவேற்றார். மடீட்சியா இணைச் செயலாளர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கான விக்க்ஷித்பாரத்- 2047 திட்டத்தை நிறைவேற்றுவதில் இளைஞர்களுக்கு உள்ள பொறுப்புகள் குறித்து பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் வடிவேல்ராஜா ஒருங்கிணைத்தார். ரமேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அருள்மாறன்,கண்ணன் நன்றி கூறினர்.