உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாத்துக்குடி - பெங்களூருக்கு சிறப்பு ரயில்

துாத்துக்குடி - பெங்களூருக்கு சிறப்பு ரயில்

மதுரை தீபாவளியை முன்னிட்டு துாத்துக்குடி - பெங்களூரு சிறப்பு ரயிலை ரயில்வே அறிவித்துள்ளது. அக். 17, 21ல் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் (06297), மறுநாள் காலை 11:00 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில் அக். 18, 22 மதியம் 2:00 மணிக்கு புறப்படும் ரயில் (06298), மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழ வந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இரண்டு 'ஏசி' முதல் வகுப்புடன் கூடிய 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதியுடன் கூடிய 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 3'ஏசி'இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 6'ஏசி'மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று (அக்., 13) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை