உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகாசி மாத வசந்த உற்ஸவம்

வைகாசி மாத வசந்த உற்ஸவம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி மாத திருவிழாவான வசந்த உற்ஸவம் ஜூன் 2ல் துவங்கி 11 வரை நடக்கிறது. முதல் நாள் இரவு 7:15 மணிக்கு மேல் 7:45 மணிக்குள் சிறப்பு பூஜைகளுடன் உற்ஸவம் துவங்குகிறது.தினமும் மாலை 5:00 மணிக்கு ஆஸ்தானத்திலிருந்து சுவாமி புறப்பாடாகி ஆடி வீதி, ராமர் சன்னதி வழியே உலா வந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வழியாக வசந்த மண்டபம் வந்தடைவார்.அங்கு அவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை