உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில பாட்மின்டன் போட்டி

மாநில பாட்மின்டன் போட்டி

மதுரை: மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்கம், மீகா அகாடமி சார்பில் மதுரையில் மாநில சப் ஜூனியர் ரேங்கிங் பாட்மின்டன் போட்டிகள் நடந்தன.போட்டி முடிவுகள்13 வயது மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சென்னை ஜியாஸ்ரீ முதலிடம், இரட்டையர் பிரிவில் மதுரை அப்ஷனா, திருச்சி நிதிக் ஷா முதலிடம் பெற்றனர். 15 வயது ஒற்றையர் பிரிவில் நாமக்கல் விதர்சனா, இரட்டையர் பிரிவில் மதுரை நஜோனிகா, யாழினி முதலிடம் பெற்றனர்.ஆடவர் 13 வயது ஒற்றையர் பிரிவில் கோவை பப்பு நோமன், இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் சரண், கோவை பப்பு நோமன் முதலிடம் பெற்றனர். 15 வயது ஒற்றையர் பிரிவில் கோவை நிதின் பிரகாஷ், இரட்டையர் பிரிவில் கோவை சூர்யா, திருப்பூர் கித்விக், கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை நஜோனிகா, திருவள்ளூர் அர்ஜூன் முதலிடம் பெற்றனர். தமிழ்நாடு சங்க துணைத்தலைவர்கள் மாறன், கிளமன்ட், ராஜ்மோகன், மதுரை மாவட்ட முதுநிலை தலைவர் கோபாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !