மாநில கூடைப்பந்து போட்டி
சோழவந்தான்: சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில கூடைப் பந்து போட்டி நேற்று தொடங்கியது.தடகள வீரர் சிவமாறன் துவக்கி வைத்தார். மே 25 வரை மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் வெல் வோருக்கு முதல் பரிசு ரூ.21 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 14 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும். இதில் 21 அணிகள் பங்கேற்கின்றன.தலைவர் மருது பாண்டியன், நிர்வாகி சந்தோஷ், செயலாளர் பங்காரு ராஜு, பொருளாளர் அபி ஏற்பாடுகளை செய்தனர்.