மேலும் செய்திகள்
பளு துாக்குதல் போட்டி
06-Sep-2025
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சி.எம்.ட்ராபி தடகளப் போட்டி நடந்தது. ஆடவர் போட்டி முடிவுகள் 100 மீட்டர் ஓட்டத்தில் கோவை மாணவர் நீல் சாம்ராஜ் முதலிடம், காஞ்சிபுரம் பிரெடரிக் ருஸல் 2ம் இடம் சென்னை சச்சின் 3ம் இடம் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் நீல் சாம்ராஜ் முதலிடம், விழுப்புரம் ஹேமப்பிரசாத் 2ம் இடம், பிரெடரிக் ருஸல் 3ம் இடம் பெற்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் சேலம் சுதர்சன் முதலிடம், தென்காசி உதயசூர்யா 2ம் இடம், திருநெல்வேலி சிவகுணாநிதி 3ம் இடம், மும்முறை தாண்டுதலில் நீலகிரி அனுஜ்நாதன் முதலிடம், சென்னை சுஜன் 2ம் இடம், கன்னியாகுமரி அஸ்வின் 3ம் இடம் பெற்றனர். நீளம் தாண்டுதலில் அரியலுார் யோபின், திருச்சி உபேஷ் ராகவ், மயிலாடுதுறை ஜெயபிரனேஷ், உயரம் தாண்டுதலில் திருச்சி அம்ப்ரீஸ், கோவை சக்திவேல், சென்னை சுஜன், குண்டு எறிதலில் காஞ்சிபுரம் சபரீஸ், தேனி சஸ்வந்த், சேலம் பிரியன், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சென்னை சஞ்சய் காந்தி, கோவை மரிய எபினேஷ், திருவள்ளூர் பவேஷ் ராஜ்குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். மகளிர் பிரிவு முடிவுகள் 100 மீட்டர் ஓட்டத்தில் துாத்துக்குடி சகாய ஜெமீமா முதலிடம், சென்னை நித்யஸ்ரீ 2ம் இடம், புதுக்கோட்டை ஸ்ரீகுருப்ரியா 3ம் இடம் பெற்றனர். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஸ்ரீகுருப்ரியா முதலிடம், திருப்பூர் வர்ஷிகா 2ம் இடம், மதுரை ஹர்ஷிதா 3ம் இடம் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் சகாய ஜெமீமா முதலிடம், திருநெல்வேலி எட்வின் ஜேசன் 2ம் இடம், மயிலாடுதுறை அர்ச்சனா 3ம் இடம் பெற்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் எட்வின் ஜேசன் முதலிடம், சென்னை சந்தோஷி 2ம் இடம், பெரம்பலுார் சாத்விகா 3ம் இடம் பெற்றனர். மும்முறை தாண்டுதலில் ஈரோடு ரேணுகா தேவி முதலிடம், விழுப்புரம் பவதர்ஷிணி 2ம் இடம், துாத்துக்குடி தான்யா 3ம் இடம் பெற்றனர். உயரம் தாண்டுதலில் தான்யா முதலிடம், புதுக்கோட்டை நிவேதா 2ம் இடம், சேலம் சாத்விகா 3ம் இடம், குண்டு எறிதலில் கோவை ஷைனி நித்திலா முதலிடம், திருநெல்வேலி நாகேஸ்வரி 2ம் இடம், சென்னை ராதிகா 3ம் இடம், வட்டு எறிதலில் ஷைனி நித்திலா முதலிடம், ராதிகா 2ம் இடம், நாமக்கல் கீர்த்தி 3ம் இடம் பெற்றனர்.
06-Sep-2025