உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி அபிஷேக பாண்டி மகன் தனபாண்டி 27. இருநாட்களுக்கு முன் நண்பர்களுடன் காரில் திருச்சி சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், கண்கள், கல்லீரல், கணையம், சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் அரசு மரியாதை செய்தனர். தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !