மாநில மகளிர் குழுப் போட்டி
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தினவிழா 17 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் நடக்கிறது. மகளிர் போட்டி முடிவுகள்
டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் மதுரை முதலிடம், ஈரோடு 2ம் இடம், வேலுார் 3ம் இடம், இரட்டையர் பிரிவில் ஈரோடு முதலிடம், திண்டுக்கல் 2ம் இடம், மதுரை 3ம் இடம் பெற்றன.எறிபந்து போட்டியில் சென்னை முதலிடம், கோவை 2ம் இடம், கிருஷ்ணகிரி 3ம் இடம் பெற்றன. கோகோ போட்டியில் சிவகங்கை முதலிடம், கிருஷ்ணகிரி 2ம் இடம், கன்னியாகுமரி 3ம் இடம் பெற்றன. லான் டென்னிஸ் போட்டியில் நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., அணி முதலிடம், ஈரோடு 2ம் இடம், தர்மபுரி 3ம் இடம் பெற்றன.பால் பாட்மின்டன் போட்டியில் மதுரை முதலிடம், சென்னை 2ம் இடம், செங்கல்பட்டு 3ம் இடம் பெற்றன. கபடி போட்டியில் ஈரோடு முதலிடம், ராமநாதபுரம் 3ம் இடம் பெற்றன. பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் திருப்பூர் முதலிடம், திண்டுக்கல் 2ம் இடம், நாமக்கல் 3ம் இடம், இரட்டையர் பிரிவில் செங்கல்பட்டு முதலிடம், திருப்பூர் 2ம் இடம், திருவண்ணாமலை 3ம் இடம் பெற்றன.