உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருடி சுத்தமாக்கிய சுகாதார வளாகம்

திருடி சுத்தமாக்கிய சுகாதார வளாகம்

கொட்டாம்பட்டி: அட்டப்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதி மற்றும் திருநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக வெங்களத்தான் கண்மாய் பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. தலா 5 குளியல், கழிப்பறைகள் உள்ளன.மேலும் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள குழாய், விளக்கு மற்றும் கதவுகளை சிலர் திருடி சென்றதால் வளாகத்தை பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடக்கிறது. புதர் மண்டி காணப்படுகிறது. அதனால் மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடாக மாறிவிட்டது. அதனால் ஒன்றிய அதிகாரிகள் வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை