உள்ளூர் செய்திகள்

மாணவி தேர்வு

உசிலம்பட்டி: மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்ற உசிலம்பட்டி தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாதேவி, 100 மீ., ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவியை தலைமை ஆசிரியர் விலாசினி, உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !