உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவியர் களப்பயிற்சி

மாணவியர் களப்பயிற்சி

திருப்பரங்குன்றம்,: காந்திகிராம கிராமிய பல்கலை இளநிலை வேளாண்மை 4ம் ஆண்டு மாணவிகள் மோனிகா, இந்துமதி, அமலயோஷினி, கீர்த்தனா, பிரேமலதா ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் கிராம தங்கல் திட்டத்தில் திருமங்கலம் அம்மாபட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளித்தனர். விவசாயிகளின் அனுபவங்களை கேட்டு அறிந்து களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.விவசாயிகளுக்கு நவீன சாகுபடி, பூச்சி மேலாண்மை, மண்வளம், உலக தென்னை, மூங்கில், தேனீ தினங்களின் சிறப்பு குறித்து விளக்கினர். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, இயற்கை கரைசல்கள் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். 70 வகை பாரம்பரிய விதைகளை கொண்டு விதைக் கண்காட்சி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !