உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர் சந்திப்பு

மாணவர் சந்திப்பு

மதுரை : டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 1990 - 91ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தனர். சமூக ஆர்வலர் குமார், சப் கலெக்டர் முத்துலட்சுமி, தொழிலதிபர் சுந்தரராஜ், வெளிநாட்டில் வசிக்கும் பார்த்திபன் ஒருங்கிணைத்தனர். விஞ்ஞானி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, சுப்புராஜ், சாந்தி, பாலசுப்ரமணி, ராதா, ராஜேஸ்வரியை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். ரூ.1.5 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்ததுடன், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வது என முடிவெடுத்தனர். தாசில்தார் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை