உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மாணவர்களின் பள்ளி தொடர் புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது.இப்பகுதியில் இச்சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்காததை கண்டித்து பலமுறை ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தனர். நேற்று காலை 8:00 மணி முதல் பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி தொடர் புறக்கணிப்பு போராட்டம் துவங்கி உள்ளனர். இதில் 120 மாணவர்கள் ஜாதி சான்றிதழ் வழங்க கோரியும், வழங்காததை கண்டித்தும் கோஷமிட்டனர். இச்சமூக அமைப்பின் தலைவர் வீராங்கன், பொருளாளர் கண்ணன், அனைத்து பழங்குடிகள் பேரியக்க மாநில தலைவர் மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வடக்கு தாலுகா தாசில்தார் மஸ்தான் கனி, இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி