உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உரம் தெளிக்கும் சிலிண்டர் உருவாக்கிய மாணவர்கள்

உரம் தெளிக்கும் சிலிண்டர் உருவாக்கிய மாணவர்கள்

மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் திரவ வடிவிலான ரசாயன உரம், களைகொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக உருவாக்கிய சிலிண்டருக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இக் கல்லுாரி இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குணசேகரன், தமிழ் மாரீஸ்வரன், தேவா, சாந்தனு, கண்ணன் முகமது மன்சூர் ஆகியோர் விவசாய நிலங்களில் திரவ உரங்கள், களைக்கொல்லி மருந்துகளை விரைவாக தெளிக்கும் வகையில் புதிய சிலிண்டரை வடிவமைத்துள்ளனர்.மாணவர்கள் கூறியதாவது: நான்கு கால்கள் பொருத்திய சிலிண்டரின் மேல் பகுதியில் ரசாயன மருந்து ஊற்றவும், கீழ் பகுதியில் குழாயுடன் கூடிய ஒரு துவாரமும் அமைத்துள்ளோம். இக் குழாயில் வயல்வெளி பரப்புக்கு தகுந்தாற் போல் ஒரு அடி இடைவெளியில் ஸ்பிரேயர் பொருத்தியுள்ளோம். சிலிண்டரின் பக்கவாட்டில் ஒரு துளையிட்டு அதில் பம்ப் மூலம் காற்று செலுத்தும் வகையில் வால்வு அமைத்துள்ளோம். சிலிண்டருக்குள் மருந்து ஊற்றியதும் பக்கவாட்டில் காற்று செலுத்தப்படும். பிறகு கீழ்ப்பகுதி குழாய் திறக்கப்பட்டதும் மருந்து ஸ்பிரேயர் வழியாக ஒரே நேரத்தில் வயல் முழுவதும் தெளிக்கப்படும்.வயல் பரப்புக்கு தகுந்தாற் போல் சிலிண்டர், ஸ்பிரேயர்களை பொருத்திக் கொள்ளலாம். தற்போது ரூ. 14 ஆயிரத்தில் சிலிண்டரை வடிவமைத்துள்ளோம். வரப்பில் இருந்தவாறே வயல் முழுவதும் தெளிப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நேரம், உழைப்பு, செலவு குறைவதோடு உரம் வீணாவதும் தடுக்கப்படுகிறது என்றனர். மாணவர்களை சேர்மன் மாதவன் புதுமை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் தனுஷ் குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை