உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிழற்குடை அமைக்க மாணவர்கள் வலியுறுத்தல்

நிழற்குடை அமைக்க மாணவர்கள் வலியுறுத்தல்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலுாரில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். திருமங்கலம் பகுதியில் இருந்து இந்த கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் மதியம் வகுப்பு முடிந்தவுடன் எதிர் திசையில் உள்ள பஸ் ஸ்டாப் சென்று பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.இந்த இடத்தில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் காத்திருக்கின்றனர். மழை பெய்தாலும் பாதுகாப்பில்லை. இந்த இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.மதுரையில் இருந்து காலையில் கல்லுாரிக்கு வரும் மாணவர்களும், திருமங்கலம் பகுதியில் மாலையில் வீடுதிரும்பும் மாணவர்களும் நான்கு வழிச்சாலையை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். அருகே திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகமும் உள்ளது. விரைவில் இந்தப் பகுதியில் திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் செயல்பட உள்ளது.இந்த அலுவலகம் வரும் பொது மக்களும் ஆபத்தான முறையில் 4 வழி சாலையை ஆபத்தாக கடக்கும் நிலை ஏற்படும். அந்தப் பகுதியில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை