உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி கார்னிவெல் திருவிழா

சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி கார்னிவெல் திருவிழா

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் 'இன்டர் ஸ்கூல் மீட்- எஸ்.எல்.சி.எஸ். ப்யூஷன் கார்னிவெல்- 2024' நிகழ்ச்சி இரு நாட்கள் நடந்தன.சிறப்பு விருந்தினரான பேச்சாளர் மதுரை வி.ராமகிருஷ்ணன், 'பள்ளி மாணவர்களிடம் வாழ்வில்வெற்றி பெற சிந்தனை மட்டும் போதாது. அதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்நிகழ்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் ' என்றார்.தனிநபர் நடனம், பாட்டு, நெருப்பில்லா சமையல், அறிவியல் கண்காட்சி, வினாடிவினா போட்டி, படங்களுடன் வார்த்தைகளை தொடர்புபடுத்துதல், குழுநடனம், ஆடை அலங்காரம், மவுனமொழி நாடகம், கழிவு பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. பரிசு வழங்கும் விழாவில் கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். ஆய்வுப்புல முதன்மையர் பிரியா வரவேற்றார். முதல் பரிசு அனுப்பானடி வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி, 2ம் பரிசு மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி வென்றது. போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.துணை முதல்வர் குருபாஸ்கர், ஆங்கிலத்துறைத் தலைவர் சுகந்தி ஹெப்சிபா பங்கேற்றனர்.அனிமேஷன் துறைத் தலைவர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ