உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் வணிகத்துறையில் தொழில் துவங்க மானியம்

வேளாண் வணிகத்துறையில் தொழில் துவங்க மானியம்

மதுரை: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக்கடன் பெற்ற விவசாயி விக்னேஷூக்கு ரூ.18.75 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இதற்கான விழா மேலுார் நாவினிபட்டியில் பயனாளியின் தொழிலகத்தில் நடந்தது.வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் சாந்தி, வேளாண் விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன், மதுரை விற்பனைகுழு செயலாளர் அம்சவேணி, தோட்டகலை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் சித்தார்த், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் யூனிட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.பயனாளி விக்னேஷ் கூறுகையில்,'' ரூ.25 லட்சத்துக்கு 9 வகை சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை வாங்கினேன். இதில் மானியமாக ரூ.18.75 லட்சம் கிடைத்தது. இந்த யூனிட் மூலம் நாவினிபட்டி கிராமத்தினர் வேலை வாய்ப்பு பெறுவர்'' என்றார். தொடர்ந்து விவசாயி பொன்னம்பல வாசனின் தோட்டத்தை ஆய்வு செய்தனர்.உதவி வேளாண்மை அலுவலர்கள் சண்முக சுந்தர பாண்டி, திருமுருகன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர்கள் பிச்சை, ராஜ்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ