உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் செல்ல வழியின்றி அவதி

கழிவுநீர் செல்ல வழியின்றி அவதி

டி.கல்லுப்பட்டி : கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியில் உள்ளனர். டி.கல்லுப்பட்டி ராம் நகர் முதல் மேல் மூப்பர் தெரு வரை 15 ஆண்டு களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப் பட்டது. இந்த கால்வாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி உள்ளது. மழை பெய்தால் ரோட்டில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறது. 200 மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாயில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். சாக்கடை கால்வாயை புதிதாக கட்ட பேரூராட்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி