மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
19-Oct-2024
மதுரை: மதுரை ரமேஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுத்துறையின் அதிகாரிகள் முறையாக நிறைவேற்றுவதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகம் தாக்கலாகின்றன.இதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் தவறான தகவல்களை சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது.உயர்நீதிமன்ற உத்தரவை குறித்த காலவரம்பிற்குள் நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
19-Oct-2024