உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊஞ்சல் திருவிழா ரத்து

ஊஞ்சல் திருவிழா ரத்து

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா ஜூலை 1ல் சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டுடன் துவங்கி ஜூலை 10ல் நிறைவடையும். தினம் உற்ஸவர் திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளுவார். ஊஞ்சலாட்டம் நடக்கும்.கும்பாபிஷேகம் துவங்கும் வகையில் ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை நடக்கிறது. 7ல் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துப்படி செய்யப்படும். 10ல் யாகசாலை பூஜை துவங்குகிறது. 14ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால் இந்தாண்டு ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !