தமிழ்க்கூடல் நிகழ்வு
மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது.ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். சங்க இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜான் கண்ணன் முன்னிலை வகித்தார். கொடுமலுார் முருகன் பதிகம் எனும் தலைப்பில் ஈரோடு ஜமால்முகமது பேசினார்.பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.