உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சொத்து வரிக்கு தமிழக அரசு வட்டி வசூலிப்பு; வரிஉயர்வால் தத்தளிப்போருக்கு மேலும் இடி

சொத்து வரிக்கு தமிழக அரசு வட்டி வசூலிப்பு; வரிஉயர்வால் தத்தளிப்போருக்கு மேலும் இடி

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி செலுத்தும் மக்களுக்கு மேலும் ஒரு சுமையாக உரிய நேரத்தில் செலுத்த தவறினால் 1 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் மாநகராட்சிகளில் வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கு 100 முதல் 150 சதவீதத்திற்கும் மேல் வரியை உயர்த்தியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வரி வசூலை அரசு தீவிரப்படுத்தியது.சமீபத்தில் மேலும் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இந்த உயர்வுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.இதற்கிடையே, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023ல் திருத்தம் வெளியிடப்பட்டது.அதில் ஆண்டுதோறும் ஏப்., 1 முதல் செப்., 30 மற்றும் அக்., 1 முதல் மார்ச் 31 வரை என இரண்டு அரையாண்டுகளில் வரி செலுத்த வேண்டும். அக்., 30க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.அதே நேரம் வரி செலுத்த தாமதிக்கும் முதல் மாதத்திற்கு1 சதவீதம், இரண்டாவது மாதத்திற்கு 2 சதவீதம் என தொடர் வட்டி(அபராதம்) வசூலிக்கவும் சத்தமின்றி அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இது மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில் அடிக்கடி உயர்த்தப்படும் சொத்து வரி உயர்வுகளால் மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வருக்கு இதுபோல் அதிகாரிகளின் ஆலோசனை வழங்குவதை, தி.மு.க.,வினரே எதிர்க்கின்றனர். வட்டி வசூலிப்பதன் மூலம் தி.மு.க., ஒரு கார்ப்பரேட் கம்பெனி சிந்தனையில் உள்ளது தெளிவாகிறது. வட்டி வசூலிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ