ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.மாநில செயலாளர் சூசை அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகள் குறித்து கவுரவ தலைவர் நாகசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முருகன், அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசினர். தேர்வுத்துறை பணியாளர் சங்க நிர்வாகி ராஜ்குமார் தீர்மானங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.