கோயில் திருவிழா
மேலுார் : சொக்கம்பட்டியில் கொப்புடாரி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்து படையலிட்டனர். மேலுார் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.