கோயில் தெப்பக்குளம் சீரமைக்க வழக்கு
மதுரை: மதுரை சுந்தரவடிவேல், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயில் செல்லுார் திருவாப்புடையார் கோயில். இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம். கோயில் அருகே தென்பகுதியில் லட்சுமி தீர்த்தம், இடப தீர்த்தம், நந்தி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. முற்காலத்தில் இதிலிருந்து தண்ணீர் எடுத்து சுவாமி, அம்பாளுக்கு அபிேஷகம் செய்வது வழக்கம்.தெப்பக்குளம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. சீரமைக்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பு: சீரமைப்பு பணி தற்போது நடக்கிறது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இணை கமிஷனர் நவ.13ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.