வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Appreciate her works, well done.
மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா
17-Mar-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராதா 38. காஞ்சி காமகோடி பீட சிஷ்யையான இவர், தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் உள்ளார். தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர், தொல்காப்பிய நுால்கள் குறித்து குழுவாக ஆய்வும் செய்து வருகிறார்.'ஷியாம் ஆர்ட் அண்ட் கிராப்ட் அகாடமி' மூலம் கிடைத்த தொல்காப்பியரின் உருவப்படம் வரைந்த 'பேனரில்' 1602 நுாற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.ராதா கூறியதாவது: இன்றைய தலைமுறையினருக்கு தொல்காப்பியர் உருவம் தெரியாது. எழுத்துப்பூர்வமாக கிடைத்த முதல் இலக்கண நுால் தொல்காப்பியம்தான். அதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொல்காப்பியர் படத்திற்குள் நுாற்பாக்களை எழுதியுள்ளேன். 'ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையின் முதல் முயற்சி இது. இலங்கை வானொலியில் 7 முறை எனது கவிதைகள் வாசிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி குறித்த ஆர்வத்தை வளர்க்க இலவச தமிழ் வகுப்பு எடுக்கிறேன். எனது சாதனைக்கு குடும்பத்தினர் உதவியாக இருந்தனர் என்றார்.
Appreciate her works, well done.
17-Mar-2025