வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களின் பணத்தை திருடியவர்கள் எல்லாம் சுகபோகமாக தானே வாழ்கிறார்கள்.
மதுரை : ''கரூர் சம்பவத்தில் உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சாபம் விட்டார். அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் அவர் புதுமுகம். ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்து விட்டார்கள். கரூரில் கேட்ட இடத்தை அரசு கொடுக்கவில்லை. பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடினர். அங்கு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது வருத்தமாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் மாவட்டம் தோறும் பஸ்சில் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும். கரூரில் பெண்களும் குழந்தைகளும் இறந்தது வயிற்றெரிச்சலை தருகிறது. உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பம் விளங்காது. இந்த நேரத்தில் விஜயை விமர்சிப்பது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன் ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார். கரூரில் அதே இடத்தில் பழனிசாமி பிரசாரத்திற்கு அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தனர். அதேபோல த.வெ.க.,வினர் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்து வேறு அகலமான இடத்தை கொடுத்திருக்க வேண்டும். விஜயால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். சம்பவம் நடந்த உடன் உடனுக்குடனாக விசாரிக்க நீதியரசரை தி.மு.க., அரசு நியமித்தது. அது எப்படி நடந்தது. இவ்வாறு கூறினார்.
மக்களின் பணத்தை திருடியவர்கள் எல்லாம் சுகபோகமாக தானே வாழ்கிறார்கள்.