மேலும் செய்திகள்
ரோடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
27-Jul-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் பாசன கால்வாயின் இரு பக்க சுவர்களும் மூடிக்கொண்டு போதுமான தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். விவசாயி மார்நாட்டான்: இக்கால்வாய் தென்கரை கண்மாயின் பாதமடையிலிருந்து முள்ளிப்பள்ளம் பகுதி விவசாயத்திற்காக செல்கிறது. பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 400ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் இதனால் பயனடைகின்றன. சரியான முறையில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் 8 ஆண்டுகளுக்குமுன்பு இரு பக்க சுவர்களும் இணைந்து கால்வாயை மூடிவிட்டன. மூடிய கால்வாயில் செடி, கொடிகள் முளைத்து அடைப்பு ஏற்பட்டு அகற்ற முடியாத நிலை உள்ளது. தண்ணீர் கால்வாயின் வழியே அடைப்பின் காரணமாக சரியாக செல்வதில்லை. இதனால் விளைச்சல் பாதித்து விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். மேலும் கால்வாய்க்கு தண்ணீர் வரும் பாதமடையும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால் அருகே உள்ள காக்காவழி மடையிலிருந்து வெளியேறும் நீரை இப்பகுதிக்கு திருப்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் காக்காவழி மடையை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கும், பாதமடை விவசாயிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதமடை, வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்றார்.
27-Jul-2025