மேலும் செய்திகள்
சாரல் மழையால் அணைகளில் நீர்மட்டம் சரிவு
11-Sep-2025
மதுரை: மதுரை வடக்கு தாலுகா பகுதியில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 126 மி.மீ., மழை கொட்டித் தீர்த்தது. மதுரையில் சில நாட்களாகவே வெயில் கொளுத்துகிறது. நேற்று முன்தினம் மதியம் 3:30 மணி முதல் 5:30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. மழை விவரம் (மி.மீ.,) மதுரை வடக்கு- 125.6, தல்லாகுளம்- 117.2, பெரியபட்டி 82, சிட்டம்பட்டி- 48.6, கள்ளந்திரி- 48.6, தனியாமங்கலம்- 26, மேலுார்- 23, புலிப்பட்டி- 82.8, வாடிப்பட்டி- 61, சோழவந்தான்- 21, சாத்தையாறு அணை- 3, மேட்டுப்பட்டி- 30.2, ஆண்டிப்பட்டி- 34.6, உசிலம்பட்டி- 30, குப்பணம்பட்டி- 35, விமான நிலையம்- 0.4, திருமங்கலம்- 11.2, பேரையூர்- 28.2, எழுமலை- 37.6, கள்ளிக்குடி- 2.8. அணைகளில் நீர்மட்டம் பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.8 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் 5586 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1156 கனஅடிதண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.7 (மொத்த உயரம் 71 அடி). அணையின் நீர்இருப்பு 5469 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 1114 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 669 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 4.8 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர் இருப்பு 2.7 மில்லியன் கனஅடி. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை, வெளியேற்றமும் இல்லை.
11-Sep-2025