உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காவு வாங்க காத்திருக்கும் பள்ளம் கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

காவு வாங்க காத்திருக்கும் பள்ளம் கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

மேலுார்: கீழவளவு, வாச்சாம்பட்டியில் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் பணிகள் நடக்காமல், தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.மேலுார் - காரைக்குடி மெயின் ரோட்டில் கீழவளவு ஊராட்சி வாச்சம்பட்டியில் மேல்நிலைத் தொட்டி கட்ட 20 அடி நீளம் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பள்ளத்தின் அருகே செல்லும் மெயின் ரோட்டில் தஞ்சாவூர், காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் பல ஆயிரம் பயணிக்கின்றனர். தவிர பள்ளத்தின் ஒரு புறத்தில் மெயின் ரோடு அருகில் குடியிருப்புகளும் உள்ளது. இப் பள்ளம் தோண்டியதோடு சரிவர பணிகள் நடக்கவில்லை.அப்பகுதி கண்ணதாசன் கூறியதாவது: பள்ளத்தில் மழைநீர், கழிவு நீர் 20 நாட்களாக நிரம்பியுள்ளது. பள்ளத்தில் நாய் இறந்து கிடந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடாகியுள்ளது. கொசு உற்பத்தியாகி பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். மேலும் குழந்தைகள், பெரியவர்கள்தடுமாறி தண்ணீரில் விழும் அபாயம் உள்ளது. ஊராட்சி தலைவியிடம் கேட்டதற்கு, 'தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் அப்பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றார். மெயின் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தினுள்விழுந்து உயிர் பலி ஏற்படும் முன் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.ஊராட்சி தலைவி மனோரஞ்சிதம் கூறுகையில், கிராம பிரமுகர்களிடம் பேசி சம்மதம் தெரிவித்தால் தொட்டி கட்டும் பணிகள் துவங்குவோம். எதிர்ப்பு தெரிவித்தால் பள்ளத்தை மூட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை