உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீர்மரபினர் உண்ணாவிரதம்

சீர்மரபினர் உண்ணாவிரதம்

மதுரை: மதுரை பழங்கா நத்தத்தில் ஒரே டி.என்.டி.,(அறிவிப்பில் இருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள்) சான்று வழங்கக்கோரி, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். விடுதலைக் களம் கட்சித் தலைவர் நாகராஜன் துவக்கி வைத்தார். தேர்தல் வாக்குறுதிப்படி, மாநிலத்தில் டி.என்.சி., (அறிவிப்பில் இருந்து நீக்கப்பட்ட சமுதாயம்), மத்தியில் டி.என்.டி., எனும் இரட்டை சான்றிதழ் முறைக்கு பதிலாக, ஒரே டி.என்.டி., சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் 2024 மார்ச்சில் உத்தரவிட்டார். அதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.டி.,க்கு நலவாரியம், தனி அமைச்சகம் அமைத்து கல்வி உரிமையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சீர்மரபினர் நலச்சங்கத் தலைவர் ஜெபமணி, பொருளாளர் ஜெயராமன், மகளிரணி நிர்வாகி தவமணி தேவி, தொட்டியநாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி, அனைத்து பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !