உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

மதுரை : உசிலம்பட்டி அருகே முதலைக்குளத்தைச் சேர்ந்தவர் மாயக்காள் 62. வறுமையில் உழலும் இவர், இருகால்களும் நடக்க இயலாததால் வீல்சேர் கேட்டு அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்துள்ளார். பலனில்லை. செப்.15 ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்தார். அண்ணா பஸ்ஸ்டாண்டில் இருந்து காலிலும், கையிலும் எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி, தவழ்ந்து வந்தார். கூட்டத்தில் இருந்த டி.ஆர்.ஓ., அன்பழகனிடம் மனுகொடுத்தார். அவருக்கு மோட்டார் பொருத்திய வீல்சேருக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மாயக்காள் தவழ்ந்து வந்த படம் தினமலர் இதழில் வெளியானது. இதையடுத்து அவருக்கு தற்காலிகமாக மூன்று சக்கர சைக்கிள் வழங்க ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச்சங்கம் முடிவெடுத்தது. இதன் தலைவர் பாலகுரு, செயலாளர் பிரேம், பொருளாளர் தினேஷ்குமார் உட்பட நிர்வாகிகள் 3 சக்கர சைக்கிளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை