பிரதமரின் மனதின் குரல்
திருநகர் : பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை திருநகர் மகாலட்சுமி காலனி மக்கள், இளைஞர்கள் காண்பதற்கு பா.ஜ., நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன், மண்டல் பொதுச் செயலாளர் ராம கபிலன் இளைஞர் அணி விக்னேஷ் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கூறுகையில், 'பிரதமர் மோடி மாதம் ஒருமுறை உள்ளூர் தயாரிப்பு பொருள்களை நுகர்வோர் வாங்குவது குறித்து பேசி வருகி றார். நேற்றைய நிகழ்ச்சியில் திருநகர் மகாலட்சுமி காலனி மக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர் என்றனர். பின்பு கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.