| ADDED : நவ 15, 2025 05:17 AM
மதுரை: அடுத்த 15 ஆண்டுகளுக்கு இவ்வுலகம் இளம் இந்தியர்களை சார்ந்துள்ளதாக மதுரையில் நடந்த 'டிரம்ப் பொருளாதாரம்' குறித்த கருத்தரங்கில் அமெரிக்கன் கல்லுாரியின் பொருளாதாரத் துறை முன்னாள்தலைவர் முத்துராஜா தெரிவித்தார். அவர் பேசியதாவது: கார்ப்பரேட் பின்னணியில் இருந்து அமெரிக்க அதிபரானடொனால்டு டிரம்ப்பின்பொருளாதார கொள்கை, நுகர்வோரை விட உற்பத்தி சார்ந்துள்ளது. 'அமெரிக்காவே முதன்மை' எனும் வகையில்உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வரி குறைப்பு, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, சட்டவிரோத குடியேறிகளை தடுப்பது, பூகோள அரசியலுக்கு ஏற்றார் போல் வர்த்தக சீர்த்திருத்தங்களை வகுப்பது உள்ளிட்டமுயற்சிகளைமேற்கொள்கிறார். இதனால் வர்த்தகப் போர், சந்தை நிலைத்தன்மை, குடியேறுவதில் கட்டுப்பாடுஉள்ளிட்டவைகளால் இந்தியா உட்பட உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுகிறது. விளைவு ஆனால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கர்கள் மட்டும் காரணமல்ல. உலகமே டாலரை பயன்படுத்துவதால் தான் அதன் மதிப்பு உயர்கிறது. எனவே ஆசிய நாடுகள் டாலருக்கான மாற்று வழியில் செல்கின்றன. இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடியை கொடுக்கிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இயற்கை வளங்களை கொண்டு உலகப் பொருளாதாரத்தை வழிநடத்துகின்றன. அமெரிக்கா அதனை நம்பியிருக்க வேண்டியுள்ளது. வாய்ப்புகள் இந்தியாவிற்கு அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளிடையே வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 'மேக் இன் இந்தியா' போன்ற சுயசார்பு திட்டத்தை நோக்கி பயணிக்க முடிகிறது. 'ஸ்டார்ட் அப்' மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது.அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், திறமை மிக்க இளம் இந்தியர்களையே நம்பியிருக்கும். இவ்வாறு பேசினார்.