உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலகின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது ஐ.ஐ.டி., இயக்குனர் பேச்சு

உலகின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது ஐ.ஐ.டி., இயக்குனர் பேச்சு

திருப்பரங்குன்றம், : 'உலகின் பார்வை தற்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இந்திய மாணவர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன'' என பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்ரி சேகர் பேசினார்.தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நிர்வாக குழு உறுப்பினர் உமா கண்ணன் தலைமையில் நடந்தது. முதல்வர் அசோக்குமார் வரவேற்றார். 1081 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்ரி சேகர் பேசியதாவது:உலகின் பார்வை இந்தியாவை நோக்கி உள்ளது. அதனால் இந்திய தொழில்துறையினரின் கவனம் மாணவர்களை நோக்கி திரும்பியுள்ளது. மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் பயனுள்ள ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அடிப்படை தொழில்நுட்ப அறிவு மிகச்சரியான முறையில் இருந்தால் ஆராய்ச்சி பெரிய அளவில் வெற்றி பெறும். தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது. தோல்விதான் சிறந்த வெற்றிக்கான முதல் படி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை