உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம் துவங்க ஆர்வமே இல்லையா; அமைச்சர் உறுதியளித்து இரண்டு ஆண்டுகளாகுதுங்க

அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம் துவங்க ஆர்வமே இல்லையா; அமைச்சர் உறுதியளித்து இரண்டு ஆண்டுகளாகுதுங்க

மருத்துவமனையின் மகப்று பிரிவில் தினமும் சராசரியாக 25 முதல் 30 பிரசவங்கள் நடக்கின்றன. 100 முதல் 150 கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அதே நேரத்தில் குழந்தையின்மை சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மாதம் 50 பேர் வரை கருத்தரிப்பு சிகிச்சை பெற வருகின்றனர். ஆண்களுக்கு சிறுநீரகவியல் துறை மூலமும், பெண்களுக்கு கருத்தரிப்பு மையம் என்ற பெயரிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ஐ.யு.ஐ., எனப்படும் கருத்தரிப்பு சிகிச்சை முறை மட்டுமே இங்கு உள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் விந்தணு, கருமுட்டைகளை சேகரித்து ஆய்வகத்தில் கருவை உருவாக்கி அதை கர்ப்பப்பைக்குள் செலுத்தும் ஐ.வி.எப்., எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் இம்மையம் தொடங்கப்படும் என அமைச்சர் சுப்ரமணியன் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். தற்போது வரை அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஐ.யு.ஐ., முறையில் கருத்தரிக்க இயலாத பெண்களுக்கான மற்றொரு வாய்ப்பு தான் ஐ.வி.எப்., முறை. மதுரையில் சிகிச்சை பெற வரும் பெண்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு ஐ.வி.எப்., சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சைக்கு ரூ.பல லட்சம் செலவாகும். எனவே சென்னை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மையத்திற்கு அரசு நிதி ஒதுக்காத காரணம் குறித்து டீன் அருள் சுந்தரேஷ் குமார் கூறியதாவது: ஏற்கனவே இங்கு அறுவை சிகிச்சை அரங்குகள் நிறைய இருந்தாலும், இதற்கென சிறப்பு உபகரணங்கள் வேண்டும். தமிழ்நாடு மருந்து சேவை கழகம் மூலம் மருத்துவ உபகரணங்கள் விரைவில் கிடைத்துவிடும். இந்த சிகிச்சை அளிப்பதற்கு கருவியல் (எம்பிரியாலஜிஸ்ட்) நிபுணர் தேவை. கருவிகள் வந்த பின், தனியார் ஸ்பெஷலிஸ்ட் கருவியல் டாக்டர்களை சிகிச்சை அளிக்கும் நாட்களுக்கு மட்டும் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கருத்தரிப்பு மையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போது செய்து வருகிறோம் என்றார். மதுரை, செப். 2 -'மதுரை அரசு மருத்துவமனையில் உயர்தர கருத்தரிப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்' என சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை