உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தலைமையாசிரியர் இல்லை 4 ஆசிரியர் பணியிடமும் காலி மாணவர்கள் தவிப்பு

தலைமையாசிரியர் இல்லை 4 ஆசிரியர் பணியிடமும் காலி மாணவர்கள் தவிப்பு

மதுரை: அலங்காநல்லுார் மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 4 முதுகலை ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இப்பள்ளியில் 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2018 முதல் தமிழ், வணிகவியல் ஆசிரியர்கள் இல்லை. 2020 ல் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஓய்வு பெற்ற பின் புதிய ஆசிரியர் நியமிக்கவில்லை. 2024 ல் தலைமையாசிரியரும் ஓய்வு பெற்றார். தற்போது ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள் கூறியதாவது: இப்பள்ளியில் 2017 - 18 ல் 1200 மாணவர்கள் படித்தனர். அடுத்தடுத்து ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அப்பணியிடம் காலியானதால் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது. தற்போதுள்ள மாணவர்களுக்கும் உரிய கல்வி கிடைக்கவில்லை. அதற்கான முயற்சியை ஆலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. பொதுத் தேர்வு தேர்ச்சி பாதிக்கிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையை அரசு ஏற்றது போல் மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளியையும் அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி