கழிவுநீர் செல்ல வழியில்லை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் வார்டு 5 சந்தனமாரியம்மன் கோயில் அருகே உள்ள மாயாண்டித்தேவர் தெருவில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருவின் பாதி பகுதி சாக்கடை மதுரை ரோட்டில் உள்ள பிரதான சாக்கடைக்கு வருகிறது. அடுத்து உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் இயற்கையாக தெருவின் தெற்குப்பகுதிக்கு செல்கிறது. தெரு ஆக்கிரமிப்பால் கழிவு நீர் செல்ல வாய்க்கால் நகராட்சி அமைக்காததால் வீடுகளில் உறிஞ்சு குழி வைத்து கழிவு நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். அது தெருவில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்துதரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.