உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பேட்டரி வாங்க காசு இல்ல... ஊரே மிதக்குது குப்பையில...

 பேட்டரி வாங்க காசு இல்ல... ஊரே மிதக்குது குப்பையில...

சோழவந்தான்: வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளுக்கு துாய்மைப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பல பேட்டரி ஆட்டோக்கள் பயன்பாடற்று காட்சி பொருளாக மாறி வருகின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் துாய்மை பணிகளுக்காக 60 பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. தற்போது 25 வண்டிகள் மட்டுமே இயங்குகின்றன. மற்றவை துருப்பிடித்து பாழடைந்து காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் துாய்மை பணியாளர்கள் குப்பையை கிடங்கில் கொட்டாமல் அருகேயுள்ள இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பல ஆட்டோக்களில் பேட்டரிகள் பழுதாகிவிட்டன. இதனை சரி செய்வதற்கும், பராமரிப்பதற்கும் அதிக செலவாகிறது. நிதி நெருக்கடியால் பழுது பார்க்க முடியவில்லை. விரைவில் தீர்வு காணப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ