தாகத்தில் முத்துலிங்காபுரம்
பேரையூர்: பேரையூர் தாலுகா பி.முத்துலிங்காபுரத்தில் 15 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர்.இங்குள்ள மின் மோட்டார் பழுதானதால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் போனது. பழுதான மின்மோட்டாரை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 நாட்களாக பொதுமக்கள் அருகில் உள்ள பகுதிகளில் குடிநீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். சில குடும்பத்தினர் குடம் தண்ணீர் ரூ.15க்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது. ஒன்றிய நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.