உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு

திருமங்கலம்: மைக்குடியில் இறையன்பு கிளை நுாலகம் சார்பில் திருக்குறள் திருப்பணி வகுப்பு நடந்தது. ஆசிரியை தாமரைச்செல்வி 49 முதல் 53 அதிகாரம் அவரை பயிற்றுவித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விடுமுறை நாட்களில் நடக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளால் மாணவர்களின் தமிழ் ஆர்வம் அதிகரிக்கும் என நுாலக நிறுவனர் பார்த்தசாரதி தெரிவித்தார். கிளை நூலகத்தின் மேற்பார்வை யாளர் செண்பக செல்வி, சமூக ஆர்வலர் காளீஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !