உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏட்டு கொலை வழக்கில் கைதானோர் கோர்ட்டில் ஆஜர்

ஏட்டு கொலை வழக்கில் கைதானோர் கோர்ட்டில் ஆஜர்

உசிலம்பட்டி, : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போலீஸ் ஏட்டு முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை நேற்று முன்தினம் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் உள்ள தனியார் காட்டுப்பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர்.இதில் முக்கிய குற்றவாளியான பொன்வண்ணன் போலீசாரை தாக்கியதால், அவரை துப்பாக்கியால் சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. இதைத் தொடர்ந்து அவருடன் இருந்த கூட்டாளிகள் சிவனேஸ்வரன் 29, சகோதரர்கள் பிரபாகரன் 30, பாஸ்கரன் 27, ஆகியோரையும் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் நான்கு பேர் மீதும் தேனி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கைதான மற்ற மூவரையும் நேற்று உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி மகாராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை