உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாலிபர் கொலையில் மூவர் கைது

வாலிபர் கொலையில் மூவர் கைது

சமயநல்லுார்: பரவையில் நவ.,21ல் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட சொத்துத்தகராறில் சந்தோஷ் 23, வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தோஷின் மாமனார் செந்தில்குமாருக்கும் அவருடன் பிறந்தவர்களான பரமேஸ்வரி, கணேஷ்குமார், சிவக்குமார் ஆகியோரிடையே மதுரை சிந்தாமணி அருகே பனையூரில் உள்ள சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. செந்தில்குமார் தனது மகளான சந்தோஷின் மனைவி தாரணிக்கு 23, வீட்டை எழுதி வைப்பதாக கூறியுள்ளார். 'வீட்டை எழுதி வைத்தால் சந்தோஷை கொன்று விடுவோம்' என உறவினர்கள் மிரட்டி வந்தனர். செப்.,21ல் பனையூரில் உள்ள செந்தில்குமார் வீட்டின் முன் உள்ள மரத்தை சிவக்குமார், கணேஷ்குமார் ஆட்கள் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிலைமான் போலீஸ் ஸ்டேஷனில் சந்தோஷ் மீதும் மற்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பரவையில் வீட்டிலிருந்த சந்தோஷை சிவக்குமார் 43, கணேஷ்குமார் 46, துாண்டுதலின் பேரில் கணேஷ்குமாரின் மகன்கள் மதன்குமார் 22, முத்துமாணிக்கம் 24, மற்றும் உறவினரான முத்துப்பாண்டி மகன் அருண்பாண்டி 27, இவர்களது நண்பர்களான கண்ணனுாரைச் சேர்ந்த அற்புதராஜ் 23, இன்பராஜ் 24, வெட்டிக்கொலை செய்ததாக சந்தோஷின் மனைவி தாரணி புகார் அளித்தார். சமயநல்லுார் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பரவையைச் சேர்ந்த கணேஷ்குமார், மதன்குமார் , அருண்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி